பெரியநீலாவணை எனும் கிராமத்தில் 1959.09.01 ம் திகதியன்று கமு /அரசினர் முஸ்லீம் கலவன் பாடசாலை எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது .புலவர்மணி ஆ .மு .சரிபுதீன் இதன் ஸ்தாபகர் ஆவார் .இப் பாடசாலை 13 மாணவர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது .இது தற்போது இருக்கும் பாக்கியத்துஸ் சாலிஹாத் ஜும்மா பள்ளிவாசல் இருக்கும் நிலப்பரப்பில் ஒரு ஓலை கொட்டினில் இயங்கியது. பின்னர் இப்பாடசாலை, தற்போது அமைந்திருக்கும் நிலப்பரப்பு அரச காணியாக இருந்தமையினால் புலவர்மனியின் முயற்சியினால் இந்நிலப்பரப்பு பாடசாலைக்கே உரிதாக்கப்பட்டது .அன்று இருந்த அரசியல் தியான S .M .காரியப்பரும் புலவர்மனியின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்தார்கள் .பின்னர் அரசின் உதவியினால் ஐந்து வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் ,அதிபர் காரியாலயம், மலசல கூடம்,கிணறு என்பன அமைக்கப்பட்டது .
காலம் கடந்த வேளையில் 1978 ம் ஆண்டு சூறாவளியால் இப்பாடசாலை பகுதி அளவில் சேதமடைந்தது .இதனை அன்று இயங்கிய YMMA நிறுவனத்தின் தலைவர்,அரசியல் வாதியான அஸ்வர் ஹாஜியார் புலவர்மணியின் வேண்டுகோளுக்கு இணங்க புனர் நிர்மாணம் செய்யப்பட்டு மீண்டும் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட்து .காலப்போக்கில் பல கட்டடங்களும் மலசல கூட வசதிகளும் அதிகரித்தது .மாணவர் தொகையும் ஆசிரியர் தொகையும் அதிகரித்தது.
சுற்றுமதில் இல்லாமையால் இப்பாடசாலை பல கஷடங்களை எதிர்கொண்டது.இதனை முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் M .H .M .அஸ்ரப் அவ்ரகளிடம் புலவர்மணி முறையிட்டபோது உடன் சுட்டு மதில் கட்டிட ஆவன செய்து சுற்றுமதிலும் கட்டப்பட்ட்து.இந்தவேளையில் அன்று கடமை ஆற்றிய அதிபர் M .C .அஹமது முஹைதீன் அவ்ரகளின் முயற்சியினால் இப்பாடசாலையின் பெயர் கமு புலவர்மணி சரிபுதீன் வித்தியாலயமாக பெயர் மாற்றம் செய்யப்ட்டது.
சுற்றுமதில் இல்லாமையால் இப்பாடசாலை பல கஷடங்களை எதிர்கொண்டது.இதனை முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் M .H .M .அஸ்ரப் ஆவன செய்து சுற்றுமதிலும் கட்டப்பட்ட்து. இந்தவேளையில் அன்று கடமை ஆற்றிய அதிபர் M .C .அஹமது முஹைதீன் அவ்ரகளின் முயற்சியினால் இப்பாடசாலையின் பெயர் கமு புலவர்மணி சரிபுதீன் வித்தியாலயமாக பெயர் மாற்றம் செய்யப்ட்டது.
பின்னர் 2004 ல் இப்பாடசாலை சுனாமியால் பதிக்கப்பட்டது. மீண்டும் பாடசாலை பகுதி அளவில் சேதமடைந்து சுற்றுமதிலும் முழுமையாக சேதமடைந்தது. இங்கு கல்வி கற்ற மானவ்ரகளில் 78 மாணவர்கள் உயிரிழந்தனர் .நிறுவனங்களின் உதவியுடன் புனர் நிர்மாணம் செய்யப்பட்டது காலப்போக்கில் மீண்டும் இப்பாடசாலை செழிப்புற்று வளர்ச்சி அடைந்தது .
காலப்போக்கில் 2007 ம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரம் ஆரம்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பல நல்ல பெறுபேறுகள் பாடசாலைக்கு வந்ததால் இப்பாடசாலை 1C பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டது .அதனை தொடர்ந்து 2017 ம் ஆண்டில் உயர்தரப்பிரிவு ஆரம்பிக்கப்பட்ட்து. இது அப்போது கடமையில் இருந்த M .M .மொஹமட் நியாஸ் அதிபர் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டது. இதற்க்கு பிரதி அதிபர் நசார் அவர்களும் ஒத்துழைப்பு வழங்கினார். இவ்வளர்ச்சியின் காரணமாக இப்பாடசாலை மீண்டும் புலவர்மணி சரிபுதீன் மகா வித்தியாலயமாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட்து.
தற்போது புதிதாக மூன்று மாடிக்கட்டிடம் அமைக்கப்பட்டு பாடசாலையின் வகுப்பறை தேவைகள் பூர்த்திசெய்யப்ப்பட்டுள்ளது.அத்துடன் விளையாட்டு துறையிலும் தங்க வெள்ளி பதக்கங்களும் எடுத்து மாணவர்கள் சாதனை படைத்தது வருகின்றனர்.
தற்போதயை (2023.07.19) எங்கள் பாடசாலையின் அதிபர் A .மொஹமட் அன்சார் சேர் அவர்கள் பல நிர்வாக மாற்றங்களை செய்து பாடசாலையின் பௌதீக வளத்திலும் மாணவர் கல்வி வளர்ச்சியிலும் கூடிய அக்கறை செலுத்த தொடங்கியுள்ளார். இதனால் மீண்டும் எமது பாடசாலை புதுப் பொலிவுடன் இயங்கி வருகின்றது.
வரலாற்று மூலம் :
S .M .ஆரிபா (ஆசிரியை) .
(ஆ .மு .சரிபுதீன் அவர்களின் மகள்)






