அருள் செய்யும் அன்பனே
அடியவர்க்கு இன்பனே
அர்சை ஆளும் எங்கள் நாயனே
எமை ஆண்டருள்வாயே
நாயனே நாயனே
அருளாலா அன்பாளா
அனு தினமும் உன்னைத் துதித்தோமே
கல்வியதில் லட்சியமாய்
காலம் கழியவே எல்லாம் வல்லவனே
கருணை வரம் தா
கல்வி தேடும் மாணவர்கள்
கழிப்புடனே கூடினோம்
கல்பு தெளிய அருள் புரிவாயே
எமை ஆண்டருள்வாயே
நாயனே நாயனே
யா அல்லாஹ் அருளாளா
நாம் பயிலும் கலைக் கூடமே
புலவர்மணி சரிபுத்தீன் மஹா வித்தியாலயம்
தினம் உயர்ந்திடவே உன் ஆசி வேண்டினோம்
கல்வி தேடும்கல்வி தேடும் ஆசான்கள்
காத்திடும் எம் அதிபரும்
கலங்கரை என விளங்கவே
எமை ஆணடருள்வாயே
நாயனே நாயனே






