''வசந்தமானது அவன் பாடலால் எங்கள் மனசு''
இன்று எமது கமு/புலவர்மணி ஷரீபுத்தீன் பாடசாலையின் கலாசார குழுவின் தலைவர் JM நெளபாஸ் ஆசிரியரின் தலைமையிலான குழுவினரின் ஒழுங்குபடுத்தலில் முஹர்ரம் இஸ்லாமிய புதுவருட வருகை கொண்டாடப்பட்டு மாணவர்களுக்கும் அதிபர்கள் ஆசிரியர்களுக்கும் இனிப்புக்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன .
உலகைக் கண்களால் கண்டு இரசித்து மகிழ்ந்து வியந்த ஆறு வயது
அமானி...
இன்று செவிகளாலும் தொடுகையுணர்வினாலுமே இந்த உலகின் அழகை ரசிக்கிறான் உணர்கிறான்
(இந்த ரோஜா மலரைப்பற்றி
ஒரு கதை தந்தேன் ஏற்கனவே)
இன்று எமது முஹர்ரம் நிகழ்வில்
அவன் தந்த பாடல் உள்ளத்தை
ஏங்க வைத்தது நெகிழ வைத்தது
அவனது தன்னம்பிக்கையும்
இறைவனை, நபியை இவன்
போற்றிப் பாடும் அழகும்
மெய்சிலிர்க்க வைத்தது
இறைவா நீ தந்த
நிஹ்மத்துக்களுக்காக
வாழ்நாள் முழுவதும் உனை
வணங்கினாலும் தகுமா?






